சென்னை,பிப்.17:பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த அரசு அலுவலர்களின் 25 குடும்பங்களுக்கு நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு செய்தி துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியி ருப்பதாவது:

கோவை கணபதி தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பாளராகப் பணியாற்றி வந்த என்.செல்வராஜ்;கடலூர் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த அ.மா. வைத்தியநாதன், திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்போர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த. எம். சந்திரன், செங்கம் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த திரு. சு.சுந்தரம்.

ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்த கி. மதுசூதனன், குறிஞ்சிப்பாடி, தீயணைப்பு நிலையத்தில், யந்திர கம்மியர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த வி.பா. ராஜாராம், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில், முன்னணி தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த.பு. கருணாகரன்,தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த த.புருஷோத்தமன், கொடுமுடி தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த எஸ்.தங்கப்பிரகாசம்.உள்ளிட்டோரின் குடும்பத்தின ருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.