புதுச்சேரி, பிப்.17:புதுச்சேரியில் துணை நிலை கவர்னர் கிரண் பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையிலான மோதலைத் தொடர்ந்து, இருவரும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்.

டெல்லியிலிருந்து திரும்பியுள்ள கிரண் பேடி, நாராயணசாமி தனது போராட்டத்தால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார் என்று குற்றஞ்சாட்டினார். புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக கவர்னர் மாளிகைக்கு முன்பு தெருவில் அமர்ந்து தர்ணா போராட் டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது.

இந்நிலையில், டெல்லியிலிருந்து திரும்பிய கிரண் பேடி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

எனக்கு எதிராக நாராயணசாமி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். நிதிப் பற்றாக்குறை யால் மாநிலத்தில் பல திட் டங்களை செயல்ப டுத்த முடியாத நிலை உள் ளது. இது நன்கு தெரிந் திருந் தும் வேண்டு மென்றே போராட்டம் நடத்தி நாராயணசாமி மக்களுக்கு இடையூறு செய்து வருகிறார்.

ஹெல்மெட் சட்டத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதை நீதி மன்றம் கண்காணித்து வருகிறது. மக்களின் உயிரை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது எப்படி தவறாகும். ஆனால், இந்த சட்டத்தை அமல்படுத்த விடாமல் நாராயணசாமி தடுக்கிறார். ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத் தாமல் ஆண்டுதோறும் சாலை பாது காப்பு வார விழா நடத்தி என்ன பயன்? புதுச்சேரியின் நிர்வாகி நான்தான். நிர்வாகி என்ற முறையில் சிலவற்றை செயல்படுத்த எனக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரம் உள்ளதால் தான் கோப்புகள் எனது கையெழுத்தாக வருகின்றன. மக்கள் பிரச்சனையில் என்னுடன் எப்போதும் விவாதிக்கலாம். எதைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இருக்கிறேன். வேண்டுமா னால் இன்று மாலை நாராயணசாமி என்னை சந்தித்து பேசலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இன்று காலை டுவிட்டரில் கவர்னர் கிரண்பேடி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், புதுவையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், பசுமையாகவும் வைத்திருக்க நடவடிக்கை எடுப்பது தவறா என கேள்வி எழுப்பியிருந்தார்.

மக்கள் பிரச்சனைகள் குறித்து பொது மேடையில் விவாதிக்க தயாரா என நாராயணசாமிக்கு அவர் சவால் விடுத்திருந்தார். சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிக்காததால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சாதாரண மனிதனின் உழைப்பு தான் அந்த குடும்பத்தையே காப்பாற்றுகிறது. அதற்காக ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி அதை அமல்படுத்துவதை தீவிரமாக்கினோம்.தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் தொடர்பாக முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் நான் பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளேன். குறிப்பாக ஏழைகளுக்கான அரிசு, ரோடியர், சுதேசி மில், சர்க்கரை ஆலை மற்றும் உள்ளவை பற்றி விவாதிக்கலாம். இவ்வாறு கிரண் பேடி சவால் விடுத்திருந்தார்.

நாராயணசாமி பேட்டி: 
இதற்கிடையே புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல மைச்சர் நாராயணசாமி கவர்னரின் சவாலை ஏற்பதாக தெரிவித்துள்ளார். எந்த இடத்தில் வேண்டுமானாலும் பிரச்சனை குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமலும், மத்திய நிதியை பெறுவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதுடன் சர்வாதிகார ரீதியில் அவர் நடந்து கொள்வதால், இந்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

20-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். 21-ந் தேதி அஞ்சல் நிலையங்கள் முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும் கடிதங்கள் அனுப்பும் போராட்டமும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.