ஸ்ரீநகர், பிப்.19: காஷ்மீரில் துப்பாக்கி வைத்துள்ள அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் இல்லாவிட்டால் சுட்டு வீழ்த்தப்பட்டு அகற்றப்படுவார்கள் என ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்த 3 மணிநேரத்தில் காஷ்மீரில் ராணுவம் எடுத்த நடவடிக்கையால், ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 3 முக்கிய தலைவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த தீவிரவாத இயக்கம் கிட்டத்தட்ட அகற்றப்பட்டு விட்டதாக ஸ்ரீநகரில் ராணுவ அதிகாரி கன்வால் ஜீத்சிங் கூறினார்.

சிஆர்பிஎஃப் அதிகாரிகளுடன் இன்று அவர் கூட்டாக அளித்த பேட்டியில் காஷ்மீரில் துப்பாக்கி கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்படும் . குடும்பத்தில் யாராவது துப்பாக்கி வைத்திருந்தால் அவர்கள் உடனடியாக சரணடைந்து விடுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தவேண்டும் இல்லாவிட்டால், துப்பாக்கி வைத்திருப்பவர்கள் சுட்டு வீழ்த்தப்படுவார்கள்.