வேலூர், பிப்.19: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருங்காளிபட்டியைச் சேர்ந்த அப்பாதுரை மகன் சங்கர் வயது 44 இவர் பில்டிங் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கருங்காளிபட்டியிலிருந்து தர்மபுரி வழியாக திருப்பத்தூர் செல்லும் வழியில் இராஜாவூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் நேர் எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.