கனா புகழ் தர்ஷன் நடிக்கும் ஃபேண்டஸி படத்தின் மூலம் நாயகியாக கீர்த்தி பாண்டியன் அறிமுகமாகிறார். அந்த நடிகை வேறு யாருமல்ல, நன்கு அறியப்பட்ட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் மகள் ஆவார்.  இது குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் கூறும்போது, ‘சினிமா குடும்பத்தில் இருந்து வந்தால் எளிதாக சினிமா கதவுகள் திறந்து விடும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் கீர்த்தி விஷயத்தில் அப்படியில்லை. ‘நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட விரும்பவில்லை.

நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் சொன்னது போல, நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரையே பெற விரும்புகிறேன். நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள மேடை நாடகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்’ என்றார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனது தந்தையான அருண் பாண்டியனுக்கு விநியோகத் தொழிலில் உதவியாக இருந்தார். சிங்கப்பூரில் சொந்தமாக விநியோக நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.\

இந்த படத்தை துரை செந்தில்குமாரின் முன்னாள் உதவியாளரான ஹரீஷ் ராம் இயக்குகிறார். இதில் விஜய் டிவி தீனாவும் நடிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள்.