ரொமாண்டிக் காமெடி படத்தில் ஹரிஷ் கல்யாண்

சினிமா

நடிகர் ஹரிஷ் கல்யாண் ‘பியார் பிரேமா காதல்‘ படத்தினை தொடர்ந்து, அடுத்து ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ என்ற காதலை மையப்படுத்திய படமும், இளம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அவரது அடுத்த படத்தை மூத்த இயக்குனர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார்.

சஞ்சய் இயக்குனர் விஜயிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரொமாண்டி காமெடி படம் ஒரு இளைஞனின் ‘ஜோதிட நம்பிக்கைகள்‘ பற்றி பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் அந்த இளைஞன் மீது இந்த நம்பிக்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பேசுகிறது. சமீபத்தில் ‘காயங்குளம் கொச்சூன்னி’ போன்ற பல பெரிய பட்ஜெட் மலையாள படங்களை தயாரித்த ஸ்ரீ கோகுலம் மூவீஸ், கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார்.