குடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் ‘கண்களை மூடாதே’

சினிமா

செயிண்ட் ஜார்ஜ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.இ.எட்வர்ட் ஜார்ஜ் தயாரிக்கும் படம் ‘கண்களை மூடாதே’. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து, தயாரித்து, நாயகனாகவும் கே.இ.எட்வர்ட் ஜார்ஜ் நடித்துள்ளார். நாயகியாக சித்ராய் நடித்துள்ளார். மற்றும் போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன் கிங்காங், சின்னதம்பி, மார்த்தாண்டம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு திஷாத் சாமி ஒளிப்பதிவு செய்ய, தமிழ்மணி சங்கர் எடிட்டிங் மேற்கொள்கிறார். திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.