சென்னை, பிப்.19: அதிமுக கூட்டணியில் பிஜேபிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த தொகுதி பங்கீடு முடிவானது.

சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக தரப்பில் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பேச்சு வார்த்தை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதென பிஜேபி முடிவெடுத்திருப்பதாகவும் கூறினார்.

அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய பியூஷ் கோயல், தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களிலும் இந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.