கவர்ச்சிக்காட்ட தயார்: வசுந்தரா அதிரடி

சினிமா

பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா.

தற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
தனது திரைவாழ்க்கை குறித்து வசுந்தரா கூறியதாவது:-

‘கண்ணே கலைமானே’ படத்தில் முக்கியமான கேரக்டரை சீனுராமசாமி எனக்கு கொடுத்துள்ளார்.
இதில் கிராமமும் இல்லாத மிகப்பெரிய நகரமும் அல்லாத ஒரு மீடியமான நகரத்துப் பெண்ணாக ஒரு தேங்காய் மண்டி ஒன்றின் ஓனரின் மகளாக நடித்திருக்கிறேன்.

அந்த கேரக்டரை உருவாக்கும்போதே என் உருவம் தான் இயக்குனருக்கு மனதில் தோன்றியதாம். அதனால் எட்டு வருடம் கழித்து என்னை அழைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தோழியாக இதில் நடித்துள்ளேன். பெரிய இடத்துப் பிள்ளை என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார். தமன்னாவுடன் சில காட்சிகள் சேர்ந்து நடித்தாலும் அது புது அனுபவமாக இருந்தது.
இதுதவிர ‘வாழ்க விவசாயிங்கிற படத்துல நடிச்சுட்டு இருக்கேன்.

இதுவும் கிராமத்து கேரக்டர் தான். ராஜபாளையத்தை சேர்ந்த மோகன் என்கிற புது இயக்குநர் இந்தப்படத்தை இயக்குகிறார். அடுத்ததாக விக்ராந்துடன் ‘பக்ரீத்’ என்கிற படத்தில் தற்போது நடிக்கிறேன் என்றார்.

நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு கவர்ச்சி தேவைப்பட்டால் நடிக்க தயார் என அவர் மேலும் கூறியுள்ளார்.