விசாகப்பட்டினம், பிப்.21: இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டி20 போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வரும் 24-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 27-ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டிகள் முறையே மார்ச் 2, 5, 8, 10, 13 ஆகிய தேதிகளில் ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, புதுடெல்லி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இந்தப்போட்டிகளில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

அதன்படி,ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று முதல் தீவிர பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். கடந்தாண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்த நிலையில், தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி, சொந்த மண்ணிலேயே இந்தியாவை வீழ்த்தி பழித்தீர்த்து கொள்ளும் முனைப்புடன் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்: ஆரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, ஆர்கே ஷார்ட், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், பீட்டர் ஹேண்ட்ஸ் கோப், கம்மின்ஸ், அலெக்ஸ் கேரே, நாதன் கோல்ட்டர், நாதன் லயன், பெகரன்டார்ப், கானே ரிச்சர்ட்சன், ஜாசன், ஆடம் ஜம்பா.