தமிழர் இடம்பெற்ற குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது

உலகம் சினிமா

லாஸ் ஏஞ்சல்ஸ், பிப்.25: கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆவண குறும்படத்துக்கு மிக உயரிய ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம், மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தினார். அவ்வப்போது பல இடங்களுக்கு சென்று பெண்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றார்.

இவரது மலிவு விலை நாப்கின்கள் மற்றும் இந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை எடுத்துச் சொல்வதை மையமாகக் கொண்டு ஆவணக் குறும்படமாக ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ எனும் பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தினை குனேட் மோங்கா தயாரித்திருந்தார்.

இப்படம் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆவணக் குறும்படமாக ஆஸ்கர் விருது விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.