சென்னை, பிப்.25:  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை திருவான்மியூரில் இன்று காலை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். மாநகராட்சியின் தொண்டு நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.

திருவான்மியூரில் உள்ள அட்சய பாத்திரம் அறக்கட்டளை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து இத்திட்டத்தை உருவாக்கியுள்ளன. அதன்படி, முதல்கட்டமாக சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 5,000 பள்ளிக்குழந்தைகளுக்கு இத்திட்டம் விரிவாக்கப்பட உள்ளது. இதனை அடுத்து, நடப்பு ஆண்டிலேயே 2 மாதங்களுக்குள் 20,000 பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் சென்றடைய நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனின் அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கூறுகையில், அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து சென்னை திருவான்மியூர் அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.