புதுடெல்லி, பிப்.27:எல்லையில் பதற்றம் நிலவுவதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

விஞ்ஞான் பவனில் நடந்த தேசிய இளைஞர் திருவிழா நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டு, இளைஞர்களுடன் கலந்துரையாட இருந்தார். அப்போது பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறிய தகவல் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் தமது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தமது அலுவலகத்துக்கு திரும்பினார்.

அந்த நிகழ்ச்சியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜியவர்தன் சிங் ரத்தோர் நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.