மொழிமாற்றுப் படங்களை தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவர் பாலாஜி. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்த படங்களின் தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கியவர், பின்னர் மொழிமாற்று திரையீட்டு தொழிலுக்கு மாறினார்.

அந்த வரிசையில் மார்ச் 15-ம் தேதி வெளியாகிறது விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ படம். இது ‘துவாரகா’ தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். விஜய் தேவரகொண்டாவை வைத்து சூப்பர் குட் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஆந்திரா முழுக்க 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்ற படம்.

சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.அவருக்கு தென்னிந்தியா முழுவதும் இளம் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.

இதில் விஜய்தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக பூஜா ஜவேரி நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்.

ஸ்யாம் கே.நாய்டு ஒளிப்பதிவு செய்ய சாய்கார்த்திக் இசையமைத்துள்ளார். பாடல்களை நெல்லை பாரதி எழுத, ஆண்டனி ரிச்சர்ட் வசனம் அமைத்துள்ளார்.கதை, திரைக்கதை அமைத்து ஸ்ரீனிவாச ரவீந்திரா இயக்கி உள்ளார்.