புதுடெல்லி, பிப்.28:ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது செல்லும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதிமுகவுக்கே இரட்டை இலை சின்னம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஓபிஎஸ் தலைமையிலான அணியே அதிமுக என்று கூறியுள்ள டெல்லி நீதிமன்றம், தினகரன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைக்காததையடுத்து குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.