சென்னை, பிப்.28:நாளை கன்னியாகுமரியில் பிரதமர் பங்கேற்க இருந்த பிஜேபி பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது.

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி யில் பல்வேறு அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார். அதே நேரத்தில் அங்கு நடைபெறும் பிஜேபி பேரணியிலும் அவர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலால் பதற்றம் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் திட்டமிட்டப்படி கன்னியாகுமரி வருவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், பிரதமர் நாளை கன்னியாகுமரி வருவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பார் என்று தெரிகிறது.

ஆனால், மதுரை, திருப்பூரைப் போல தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குமரி பேரணியில் பிரதமர் கலந்துகொள்ள மாட்டார் என்றும் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.