புதுச்சேரி, பிப்.28: தமிழக வீரர் அபிநந்தனை மீட்க ஐநா சபையுடன் பேசி உடனடி தீர்வு காணவேண்டும் என்றும் பிரதமர் நரேந்திமோடி, ஜனாதிபதி ராமநாத் கோவிந்த் ஆகியோருக்கு புதுவை முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீவிரவாத தாக்குதலில் நம் நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் பலியானது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நம் ராணுவ வீரர்களுக்கு மக்கள் என்றும் துணை நிற்போம். உயிரிழந்த 2 ராணுவ வீரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஒட்டு மொத்தத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது நம் ராணுவ வீரர்கள் தாக்கியது வெற்றி கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழையும் போது நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இது இந்திய ராணுவத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. அதேவேளையில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராணுவ விஞ்ஞானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் தவறி விழுந்து விட்டார். இந்த நிலையில் அவரை பாகிஸ்தானிடமிருந்து மீட்க வேண்டும் என்று இந்திய சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஐநா சபை மூலம் பேச்சுவார்த்தை நடத்தி அபிநந்தனை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தை பிஜேபி அரசியலாக்க முயற்சிக்கிறது. புதுச்சேரியில் 6 நாட்கள் தொடர்ந்து மக்களுக்காக தர்ணா போராட்டம் நடத்தி 39 கோரிக்கைகள் வைத்தும் ஒருசில கோரிக்கைகள் மட்டும் ஏற்கப்பட்டது. சில கோரிக் கைகள் உயர் நீதிமன்றத்தில் உள்ளதால் நிறை வேற்றும் நிலையில் உ ள்ளது.

போராட்டத்தின் கடைசிநாள் அன்று கவர்னரை சந்தித்தபோது கவர்னரிடம் அரசு விதிகளுக்கு மாறாக அரசு ஊழியர் களை அழைத்து கவர்னர் மாளிகையில் பயிற்சி கொடுக்கப் படுகிறது. ஏற்கனவே அரசு ஊழியர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தான் வந்துள்ளனர். நீங்கள் அளிக்கும் பயிற்சி இந்தியாவில் எங்கும் இல்லாத பயிற்சி என்றும் அந்த பயிற்சி முடிந்து தேர்வு எழுதவேண்டும் என்று கூறியுள்ளீர்கள்.

தேர்வு பதவி உயர்வுக்கு பொருந்துமா என கேட்டதற்கு அவர் பதில் அளிக்க வில்லை. புதுவை மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கவர்னர் கிரன்பேடிக்கு தக்க பதில் கொடுப்பார்கள் என்றார்.
இந்த பேட்டியின் அரியாங்குப்பம் எம்எல்ஏ ஜெயமூர்த்தி உடனிருந்தார்.