சென்னை, மார்ச் 1:பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தின் வீர மகன் அபிநந்தன் இன்று பிற்பகலில் தாய் மண்ணை மிதிக்கிறார். அவரை வரவேற்பதற்காக வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் தேசியக் கொடியுடன் திரண்டனர்.
வாகாவிலிருந்து அவரை சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத் துச் செல்லப்படுகிறார். இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் எப்16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தும் போது விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற மிராஜ்2000 விமானம் விபத்துக்குள்ளாகி பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது.

பாராசூட் மூலம் குதித்த அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. உலக நாடுகளின் நிர்ப்பந்தம் மற்றும் உள்நாட்டு நெருக்கடி காரணமாக அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக் கைகள் இன்று தொடங்கின. ராவல் பிண்டியிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

அங்கிருந்து அவர் விமானம் மூலம் லாகூர் சென்று வாகனம் மூலம் இந்திய-பாக் எல்லையான வாகா வந்தடைகிறார். அவரை வரவேற்பதற்காக வாகா அட்டாரி எல்லையில் ஆயிரக்கணக் கான மக்கள் தேசியக் கொடியுடன் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அபிநந்தன் தாய் மண்ணை தொட்டதும் மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்கின்றனர். அபிநந் தனை வரவேற்பதற்காக குரூப் கேப்டன் ஜே.டி.குரியன் தலைமையில் இந்திய விமானப்படை குழு தயார் நிலையில் உள்ளது. தனது மகனை வரவேற்பதற்காக விமானப்படையின் முன்னாள் அதிகாரி வர்தமான் குடும் பத்தோடு காத்திருக்கிறார்.

அபிநந்தனை வரவேற்பதற்காக பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர்சிங், அட்டாரி சென்றுள்ளார். அபிநந்தன் எப்போது வாகா எல்லைக்கு வருவார் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது என்று அமிர்தசரஸ் துணை கமிஷனர் தில்லான் கூறியிருக்கிறார். பல்வேறு சம்பிரதாய நடவடிக்கைகள் இருப்பதால் அவர் வரும் நேரத்தை குறிப்பிட்டு சொல்ல முடியாது என்று அவர் கூறினார்.

வாகா எல்லையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இந்திய விமானப்படை குழு அவரை புதுடெல்லிக்கு அழைத்துச் செல்கிறது. புதுடெல்லி பாலம் விமான நிலையத்தில் தொழில் நுட்ப பிரிவு பகுதியில் அவரை தரை இறங்குகிறார். உடனடியாக பாதுகாப்பு மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

விமானம் நொறுங்கியது முதல் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிப்பட்டது மற்றும் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு ஏற்பட்ட சோதனைகள் ஆகியவை குறித்து பாதுகாப்பு மற்றும் ராணுவ அதிகாரிகள் கேட்டறிவார்கள் என்று தெரிகிறது. பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் நடைபெறும். அதன் பின்னர் அவர் தனது குடும்பத்தினரை சந்திக்க முடியும்.