தஞ்சை, மார்ச் 3:தஞ்சை அருகே மாதா கோட்டையில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தஞ்சையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு தஞ்சை அருகே மாதா கோட்டையில் லூர்து மாதா கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன் ஜல்லிக்கட்டு போட்டியை கொடி அசைத்து தெடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் 750 காளைகள்,400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஈடுபட்டுள்ளனர். போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டன. பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

பரிசோதனைக்கு பிறகே காளைகளும், வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.