மேல்மருவத்தூர் மார்ச் 3.மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளாரின் 79-வது அவதார தின விழா மேல்மருவத்தூரில் செவ்வாடை பக்தர்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அருள்திரு அடிகளாரின் அருள்தரிசனம் பெற்ற பல லட்சம் செவ்வாடை பக்தர்கள் அவரிடம் ஆசிபெற்றனர்.இன்று காலை 7.30 மணிக்கு தம் இல்லத்தில் உள்ள தன் பெற்றோரின் படங்களுக்கு தீபாராதனை காட்டி வணங்கிவிட்டு அடிகளார் வீட்டிலிருந்து வெளியே வந்ததும், அவரைப் பார்க்க ஆவலோடு காத்திருந்த பக்தர்கள் ‘ஓம்சக்தி! பராசக்தி!’ என்று வாழ்த்தொலி எழுப்பினர்.

அங்கே இருந்த பக்தர்களின் வேண்டுதலை ஏற்று அங்கிருந்த மலர் அலங்கார ரதத்தில் அவர் ஏறியதும் அவரை ஊர்வலமாக அழைத்துச் செல்ல பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து தங்கள் மாவட்ட சிறப்பு கலைநிகழ்ச்சிகளோடு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் மலர் ரதத்திற்கு முன்னும் பின்னும் ஊர்வலமாக வந்தனர்.

8.15 மணிக்கு சித்தர்பீடம் வந்த அருள்திரு அடிகளாருக்கு பக்தர்கள் பாதபூசை செய்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரகாரம் வலம் வந்த அடிகளார் கருவறையிலும் புற்று மண்டபத்திலும் தீபாராதனை காட்டிய பின் அங்கே வைக்கப்பட்டிருந்த பிறந்த நாள் கேக்கை வெட்டி குழந்தைகளுக்கு வழங்கினார்.

பின்னர் அங்கே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அலங்கார மேடையில் அவர் அமர விழாவை முன்னின்று நடத்தும் ஆதிபராசக்தி இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில் குமார், ஸ்ரீதேவி ரமேஷ், டாக்டர்.ரமேஷ், சேலம் தொழிலதிபர் உமாதேவி மற்றும் சேலம், நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அதன் தலைவர்கள் அடிகளாருக்கு மரியாதைகள் செய்து ஆசிபெற்றனர்.

இந்த அருள் தரிசனத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், ஓய்வு பெற்ற நீதிபதி இரா÷ஸ்வரன், தமிழ்நாடு தேர்வாணைய குழுத் தலைவர் அருள்மொழி, சிறப்பு திட்ட செயலாக்க இயக்குநர் ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி öஐயந்த், மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியம் ஆகியோர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று அடிகளாரிடம் ஆசி பெற்றனர்.

8.45 மணி முதல் அருள்தரிசனம் தொடங்கியது. நேற்று இரவு முதல் நீண்ட வரிசையில் கூட்டமாக காத்திருந்த பக்தர்கள் தொடந்து வந்து அடிகளாரிடம் ஆசிபெற்றுச் சென்றனர். அப்படி ஆசி பெறுவதற்காக வந்தவர்களில் பல வெளிநாட்டு பக்தர்களும் இருந்தனர்.

வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு ஆதிபராசக்தி இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளும் உணவு, தண்ணீர், மோர், ஐஸ்கிரிம், குழந்தைகளுக்கு பால் முதலியவைகளை வழங்கிய வண்ணம் இருந்தனர்.
விழாவின் முதல்நாள் பிப்ரவரி 28 அன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்த ஆன்மிக ஜோதிகளுக்கு இயக்கத்தின் துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் வரவேற்பு கொடுத்து அந்த ஜோதிகள் மூலம் கலச, விளக்கு, வேள்வி பூசையை துவக்கி வைத்தார்.

இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் வேள்வியில் பங்கேற்றனர்.2 ஆம் நாள் மார்ச் 1 அன்று சேலம், நாமக்கல் மாவட்ட பக்தர்கள் அடிகளாரை வெள்ளி ரதத்தில் அமரவைத்து சித்தர்பீடம் அழைத்து வந்தனர். அன்று மாலை 5.30 மணி அளவில் துவங்கிய மேடை நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்கள் சார்பாக ஆதிபரா
சக்தி பொறியியல் கல்லூரியும், தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
மார்ச் 2 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் கடலுடர், விழுப்புரம் மாவட்ட பக்தர்கள் அடிகளாரை தங்க ரதத்தில் அழைத்து வந்தனர். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக பொது பாதபூசை செய்து அடிகளாரிடம் ஆசிபெற்றனர்.
மாலை 5.00 மணிக்கு இயக்க அரங்கில் சிறப்பு மேடைநிகழ்ச்சிகள் ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் முன்னிலையில் துவங்கின. விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், ஓய்வு பெற்ற
நீதிபதிகள் எம்.தணிகாசலம் மற்றும் எஸ். ரா-ஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விழா மலரை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
தொல்லியல் அறிஞர் மா.சுந்தரமூர்த்தி, (ஓய்வு, துணை இயக்குநர், தொல்லியல்துறை) அவர்கள் எழுதிய ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடமும் சுற்றியுள்ள சிவசக்தி தலங்களும்’ என்ற புத்தகத்தை உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தணிகாசலம் அவர்கள் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி அம்மாவின் அருள்வாக்குகள் எடுத்துரைக்கும், கைபேசி செயலியினை உயர்நீதிமன்ற நீதிபதி இரா÷ஐஸ்வரன் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் பேருரை ஆற்றினார்.
தொடர்ந்து 1712 பயனாளிகளுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்பில் மக்கள் நலப்பணித் திட்டங்களையும், பொருட்களையும், உபகரணங்களையும் ஆன்மிககுரு பங்காரு அடிகளார் வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், சேலம், நாமக்கல் மாவட்டங்களின் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் பொறுப்பேற்று சிறப்பாகச் செய்திருந்தனர்.