சென்னை, மார்ச் 3:தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சமக தலைவர் சரத்குமார் திடீரென சந்தித்து பேசினார்.

பின்னர் நிருபர்களுக்கு சரத்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. வாக்கு பணம் வாங்காமல் வாக்காளர்கள் வாக்களித்தால் நல்ல வேட்பாளர்களை மக்களால் தேர்ந்தெடுக்க முடியும். ஒத்த கருத்து உடையவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நல்ல நடக்கும்.

நாட்டு மக்களுக்கு நல்ல நடக்க வேண்டும் என்றால் நல்லவர் நாட்டை ஆள வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவரது உடல் நலன் குறித்து விசாரித்தேன். தமிழக அரசியல் சூழல் குறித்தும் இருவரும் விவாதித்தோம். எந்த கூட்டணியில் இடம் பெறுவது என ஏற்கனவே எங்கள் கட்சி சார்பில் செயற்குழு பொதுக்குழு கூடி ஆலோசித்து உள்ளேன். கூட்டணிக்காக யாரிடமும் பேரம் பேசவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறித்து வரும் 5-ம் தேதி அறிவிப்பேன். இவ்வாறு சரத்குமார் கூறினார்.