சென்னை, மார்ச் 5: சென்னை மாநில கல்லூரியில் பூமிக்கு அடியில் கட்டப்பட்ட ரகசிய அறை குறித்து மேலும் ஆய்வு நடத்த தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.
சென்னை கடற்கரையில் உள்ள மாநில கல்லூரி 179 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது ஆகும். இந்த கல்லூரியில் சுரங்க அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கல்லூரியின் முதல்வர் ராவணன் மற்றும் புவியியல் பேராசிரியரும், என்சிசி அதிகாரியுமான எஸ்.என்.நெப்ளோய் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

இந்த பாதாள அறை 200 மீட்டர் அகலத்தில் உள்ளது. ஒரேஒரு நுழைவுவாயில் மட்டும் உள்ளது. மரப் பலகைகள், படிக்கட்டுகள் ஆகியவை உள்ளன. இதன் படிக்கட்டுகள் கல்லூரி முதல்வர் அறை வரையும் மற்றும் முதல் தளம் வரையும்  செல்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனுக்கு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தொல்லியல் துறை அதிகாரிகள் இதனை பார்வை யிட்டுள்ளனர்.
இது குறித்து 1985-ல் ஓய்வு பெற்ற என்சிசி அதிகாரி நெப்ளாய் கூறுகை யில், இந்த அறையில் என்சிசி பயிற்சி யாளர்களுக்கான சீருடை மற்றும் துப்பாக்கிகளை நாங்கள் வைத்து இருந்தோம். இதில் உள்ள மின்
சார விளக்குகளையும் பயன்படுத்த முடியும். இதை இன்னும் ஆய்வு செய்தால் மேலும் பல ரகசியங்களை கண்டுபிடிக்க முடியும் என்றார்.

கல்லூரி முதல்வர் ராவணன் கூறுகையில், ஆங்கிலேயர்கள் தங்களது ஆயுதங்களை பதுக்கி வைக்கும் இடமாக இதை பயன் படுத்தி இருக்கிறார்கள். தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை வரை இங்கிருந்து பாதை உள்ளது.  இதனை கண்டுபிடிக்க தொல்லியல் துறையின் உதவியை நாங்கள் கேட்டிருக்கிறோம். இந்த ஆய்வு தொடரும் பட்சத்தில் பாதாள
அறையை பயன்படுத்துவதை நாங் கள் தவிர்த்துவிடுவோம் என்றார்.