சென்னை, மார்ச் 6:அதிமுக கூட்டணியில் சேர்வதா என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதால், முடிவு எடுக்க முடியாமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திணறி வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பிஜேபி, பாமக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. அக்கட்சியில் தேமுதிகவை இணைப்பதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொகுதிகள் ஒதுக்கீட்டில் அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி சென்னைக்கு வர உள்ளார். அந்த கூட்டத்தில் தேமுதிகவையும் சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து விஜயகாந்த் இன்று 4-வது நாளாக கட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.ஏற்கனவே திமுக கூட்டணியை இறுதி செய்து விட்ட நிலையில் தேமுதிக அதிமுக அணியில் இணைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அந்த அணியில் 4 தொகுதிகளை மட்டுமே வழங்க அதிமுக முன்வந்துள்ளது. அதை ஏற்று கொள்வதில் கட்சியினருக்கு தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. 4 தொகுதிகளை ஏற்று கொள்வதா அல்லது தனியாக போட்டியிடுவதா என்று விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

தனியாக போட்டியிட்டால் எந்த தொகுதியிலும் வெற்றி பெறுவது கடினம் என்பதால் அதிமுக வழங்கும் 4 தொகுதிகளை பெற்று கொண்டு கூட்டணியில் சேரலாம் என கட்சியில் ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.

இதனால் கூட்டணியில் இணைவது குறித்து முடிவு எடுக்க முடியாமல் விஜயகாந்த் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற பின்னர் கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதிமுக அளிக்கும் 4 தொகுதிகளை பெற்றுக்கொள்வதற்கு கட்சியில் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டால், கூட்டணியில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை வரும்போதெல்லாம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசி வந்தார். இன்று சென்னை விமான நிலையத் திற்கு வந்தபோது தேமுதிக அலுவல கத்திற்கு செல்வீர்களா என்று கேட்ட போது, பிரதமர் பங்கேற்கும் பொதுக் கூட்ட ஏற்பாடுகளை பார்வையிடு வதற்காக தாம் வண்டலூர் செல்ல இருப்பதாக அவர் கூறினார்.
இதன் மூலம் அவர் விஜயகாந்தை சந்திக்கவில்லை என்பதை மறைமுக மாக உணர்த்தினார்.