ஹன்சிகா – சிம்பு மீண்டும் கைகோர்த்தனர்

சினிமா

ஸ்ரீகாந்த், ஹன்சிகா நடித்துவரும் மஹா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.

சிம்பு தற்போது உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனில் உள்ள அதி நவீன ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பை துருக்கியின் இஸ்தான்புல் பகுதியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். சிம்பு, ‘மஹா’ படத்துக்காக மொத்தம் 10 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

‘ஷோயப்’ எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். சென்னையிலிருந்து இயக்குனர் ஜமீல், படக்குழுவுடன் துருக்கிக்கு கிளம்ப, சிம்பு லண்டனில் இருந்து புறப்பட்டு இஸ்தான்புல் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அங்கே சிம்பு, ஹன்சிகா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைப் படம் பிடிக்கின்றனர். சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன் பிரிந்துவிட்டனர். வாலு படத்திற்கு பிறகு ‘மஹா’ படத்தில் சிம்பு, ஹன்சிகா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

மஹா படம் தொடங்கப்பட்டு முதல் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. காசி கோவில் அருகே ஹன்சிகா புகைப்படம் போஸ்டர் வெளியாகி சர்ச்சையானது. அதன் பிறகு சர்ச் பின்னணியில் ஹன்சிகா தொழுவது போன்ற படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகிறது.