டபுள் மீனிங் நிறுவனம் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள படம் வாட்ச்மேன். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடித்துள்ளது. படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய சரவணன் ராமசாமி இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய் இயக்கி உள்ளார். இப்படம் அடுத்த மாதம் 12-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. நடிகர் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ‘கூர்க்கா’ என்ற படம் தயாரிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.