பவர் கிங் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.பிரபாகர் தயாரித்துள்ள படம் ஐபிசி 376. இப்படத்தில் முன்னணி நடிகை நந்திதா இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார். படத்திற்கு தில்ராஜ் ஒளிப்பதிவு செய்ய நிர்மல் இசை அமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்குமார் சுப்பராமன் இயக்குகிறார்.

படத்தின் தலைப்பு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். எனவே இந்தப் படத்திலும் பெண்கள் மீதான பெண்கள் பாலியல் குற்ற சம்பவங்கள் குறித்து கதை அமைக்கப்பட்டிருப்பதால் படத்திற்கு அவ்வாறு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.