சென்னை, மார்ச் 7:பழம்பெரும் நடிகை குசலகுமாரி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நாயகர்கள் படங்களில் நடித்த குசலகுமாரி திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

எம்ஜிஆர்-சிவாஜி ஆகியோர் சேர்ந்து நடித்த கூண்டுக்கிளியில் சிவாஜியின் ஜோடியாக குசலகுமாரி நடித்தார். மேலும் பராசக்தி, ஔவையார், கள்வனின் காதலி, கொஞ்சும் சலங்கை, போன மச்
சான் திரும்பி வந்தான், அரிச்சந்திரா உள்பட 200 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார்.

தனது தம்பி சுந்தரம் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த அவர் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். குசலகுமாரி மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.