உயிரைக் கொடுத்து உரிமையாளரை காத்த நாய்

இந்தியா

புவனேஸ்வர், மார்ச் 7:ஒரிசா மாநிலத்தில் ஒன்றரை வயதே ஆன ஒரு நாய், வீட்டுக்குள் நுழைய முயன்ற நாகப்பாம்பை கடித்துக் குதறி தன்னை வளர்த்த உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றியது. அதே நேரத்தில் நாகம் கடித்ததால் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.

ஒரிசா மாநிலம் ஜார்டினி என்ற நகரில் அமன்ஷெரிப் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர், டைசன் என்ற நாய்க்குட்டியை வளர்த்து வந்தார்.

ஒன்றரை வயதே ஆன அந்த நாய்க்குட்டி வீட்டின் முன்பு எப்போதும் காவல் காத்துக்கொண் டிருக்கும். கடந்த திங்கள்கிழமை இரவு நாகப்பாம்பு ஒன்று அவர்களது வீட்டிற்குள் நுழைய முயன்றது. இதைப் பார்த்ததும் டைசன் குறைத்தது. நாகப்பாம்பும் சீறியது.

டைசன் அஞ்சாமல் நாகப்பாம்பை கவ்வியது. அப்போது, நாயின் சத்தம் கேட்டு ஷெரிப் வெளியே வந்து பார்த்தார். நாகப்பாம்புடன் டைசன் போராடுவதை பார்த்தார். டைசன் கடித்து குதறியதால் நாகப் பாம்பு செத்துவிட்டது. நாய்க்குட்டியும் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தது. அதன் அருகில் சென்று பார்த்தபோது முகத்திலும், வால் பகுதியிலும் நாகம் தீண்டி யிருப்பது தெரியவந்தது.

உடனடியாக டைசனை காப்பாற் றுவதற்காக கால்நடை வைத்தியர் களை வலைப்போட்டு ஷெரிப் தேடினார். ஆனால் யாரும் கிடைக்க வில்லை. தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அந்த நாய்க்குட்டி உயிரை இழந்ததுட ஷெரீப்புக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.