புதுச்சேரி, ஏப்.1: அரசியல்வாதிகள் மீது டுவிட்டரில் காட்டும் கோபத்தை வரும் தேர்தலில் வாக்காக செலுத்த வேண்டும் என்று கமல் கூறியுள்ளார். பொதுக்கூட்டத்தில் புதுவை மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டு பேசியதாவது:-
புதுவையை தமிழகத்தின் ஒரு பகுதியாகத் தான் நான் பார்க்கிறேன். ஆனாலும் தனித்தன்மையை புதுவை இழந்து விடக்கூடாது.

அப்படி இருந்தால் தான் புதுவைக்கும், தமிழருக்கும் பெருமை,
அரசியல் கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் நல்ல கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். நாங்கள் திறமையையும், நேர்மையையும் வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். படித்தவர்கள் அனைத்து இனத்திலும் உள்ளனர் என்பதை மக்கள் நீதி மய்யம் நம்புகிறது.

தமிழகம் மற்றும் புதுவை படுத்த படுக்கையில் கிடக்கிறது. அதை எழுந்து நிற்க வைக்க வேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளது. அதனை உங்களின் வாக்குகளால் மாற்றியமைக்க முடியும் டுவிட்டரில் அரசியல் வாதிகள் மீது காட்டும் கோபத்தை இளைஞர்கள் தேர்தலில் வாக்களித்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.