சென்னை, ஏப்.7:
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் சைட் கேர் பவுண்டெசன் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை சென்னை தி. நகரில் நடத்தியது.
தி.நகரில் பெரியார் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்த இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 74 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு இலவச கண் பரிசோதனை நடைபெற்றது. அவர்களில் 28 பேருக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் நாள்தோறும் நல்லது செய்வோம் என்ற பெயரில் ‘என்றும் அன்புடன்’ என்ற தலைப்பில் சமூக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி சமூக தொண்டு ஆற்றி வருகிறது.

இந்நிறுவனத்தின் செயல்பாடுகளால் சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் பயன் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 200 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தி வருகிறது. இதுவரையிலும் 12,500 நிகழ்ச்சிகளுக்கு மேல் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் நடத்தி
உள்ளது.