சென்னை, மார்ச் 12: தமிழகம் முழுவதும் சுவர்களில் வரையப்பட்டிருந்த பல்வேறு விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 11,375 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அதில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. எஞ்சிய சுவர் விளம்பரங்களையும் அழிக்கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்தார்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு, வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து வாக்காளர்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால் முதல் முறையாக இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் வரைந்திருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.  தமிழகம் முழுவதும் சுவர்களில் வரையப்பட்டிருந்த பல்வேறு விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 11,375 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அதில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. எஞ்சிய சுவர் விளம்பரங்களையும் அழிக்கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

மக்களவை தேர்தலில் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் கிரிமினல் குற்றப்பின்னணி குறித்து பத்திரிகைகளில் 3 தடவை விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த தொகுதிகளில் இடைத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் போடப்பட்டிருந்த 2 வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவை பார்த்த பின்னர் அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும். ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது தொடர்பாக எந்த கட்சியும் புகார் தெரிவிக்கவில்லை.

மதுரையில் வாக்குப்பதிவை தள்ளி வைப்பது தொடர்பாக வரும் 14-ந் தேதி முடிவெடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் படங்கள் அகற்றப்பட்டுள்ளன.