புதுடெல்லி, மார்ச் 12: வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி அரியானா மாநிலம் கர்னால் தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல்கட்சிகள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தீவிரமடைந்துள்ளன. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு வரும் 19-ந் தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது.

இந்த நிலையில் பிஜேபி தலைவரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்தி அரியானா மாநிலம் கர்னால் தொகுதியில் போட்டியிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருடைய மகன் வருண் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் பிலிப்பிட் தொகுதியில் களம் காண்பார் என்று தெரிகிறது.