ஹாட்ரிக் கோல் அடித்து காலிறுதியை உறுதி செய்த ரொனால்டோ

விளையாட்டு

டுரின், மார்ச் 13: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிக்கு, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ‘மேஜிக்கல் ஹாட்ரிக்’ கோல் காரணமாக ஜூவாண்டிஸ் அணி தகுதி பெற்றது.
இத்தாலியின் டுரின் நகரில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றின் இரண்டாவது லெக் போட்டியில் ஜூவாண்டிஸ் அணி, அத்லெடிகோ மாட்ரிட் அணியை எதிர்கொண்டது. இதன் முதல் லெக் போட்டியில், அத்லெடிகோ அணி 2-0 என வென்றது.

இந்நிலையில் இரண்டாவது லெட் போட்டியில் ஜூவாண்டிஸ் அணி, கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது. பரபரப்பான நடந்த இந்த ஆட்டத்தில், ஜூவாண்டிஸ் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தினார்.  இதற்கு பதிலடி கொடுக்க முயற்சித்த அத்லெடிகோ அணி வீரர்களின் முயற்சி முழுதும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஜூவாண்டிஸ் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.