சென்னை, மார்ச் 13: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா பாடிய விசில் போடு பாடல் வைரலாகி வருகிறது.  இந்நிலையில் மே 30ல் இங்கிலாந்தில் உலகக்கோப்பை நடக்கவுள்ளதால், அதற்கு முன்னதாக ஐபிஎல்., தொடரை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், வழக்கமான ஏப்ரல் முதல் வாரத்துக்கு பதிலாக, மார்ச் 23ல் ஐபிஎல்., தொடர் துவங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நடக்கும் முதல் ஐபிஎல்., தொடரின் முதல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 16ல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா பாடிய விசில் போடு பாடல், தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.