சீனா முட்டுக்கட்டை: ஐ.நா. பாதுகாப்பு சபை எச்சரிக்கை

உலகம்

ஜெனீவா, மார்ச் 14: மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா 4-வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ள நடவடிக்கை, ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு சபையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. பெரும்பாலான நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தயராக இருந்த போதிலும், சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டது. இதனால், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

ஏற்கனவே 3 முறை தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் இந்த விஷயத்தில் முட்டுக்கட்டை போட்ட சீனா மீண்டும் அதே நிலையை எடுத்திருப்பது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் செயல்பாடு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள பிற உறுப்பு நாடுகளுக்கும் கடும் கோபத்தை அளித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மாற்று வழிகளை ஆராய நேரிடும் என்று அந்த நாடுகள் சீனாவை எச்சரித்துள்ளன.