பொள்ளாச்சி விவகாரம்: அஸ்வினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

விளையாட்டு

சென்னை, மார்ச் 14: பொள்ளாச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து யாராவது சொல்ல முடியுமா? என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியதையடுத்து, கொதிப்படைந்த நெட்டிசன்கள் பதிலுக்கு சரமாரியான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர், அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொள்ளாச்சியில் போராட்டமா? பொள்ளாச்சியில் தற்போது என்ன நடக்கிறது என்பது பற்றி யாராவது எனக்கு சொல்ல முடியுமா? என்று பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்து கொதித்தெழுந்த நெட்டிசன்கள், ‘அஷ்வின், நீங்கள் பிரபலமாக இருந்தால் அந்த செய்தி என்னவென்று கூட பார்க்காமல் டிவிட்டரில் கேள்வி கேட்பீர்களா? ’என்று பதிலுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, அஸ்வினை வறுத்தெடுத்துள்ளனர்.