தாம்பரம், மார்ச் 14: வண்டலூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சிலிருந்து இறங்கிய கல்லூரி மாணவன் அதே பேருந்தின் சக்கரம் ஏறி பலியான சம்பவம் இன்று காலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பரனூர் செட்டிபுண்ணியம், டாடா நகர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் சுகுனா. வீட்டுவேலை செய்து வருகிறார். இவரது கணவன் ஜோதிலிங்கம் கடந்த 2 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு அபஷேக் (வயது 19) என்ற மகனும் ஒருமகளும் உள்ளனர்.

அபிஷேக் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.இவர் தினமும் அரசு பேருந்தில் வண்டலூர் வந்து படித்து விட்டு செல்வது வழக்கம் என்பதால் இன்று காலை பேருந்தில் வண்டலூர் பஸ் நிலையம் வந்துள்ளார்.
அப்போது அபிஷேக் பேருந்திலிருந்து இறங்கும்போது டிரைவர் திடீரென பஸ்சை இயக்கியுள்ளார்.இதில் நிலை தடுமாறி மாணவன் கீழே விழுந்துள்ளார். அப்போது பின் சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அபிஷேக்கை உடனடியாக பொதுமக்கள் மீட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியில் மாணவன் பரிதாபமாக பாலியானார்.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவுசெய்து பேருந்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தசம்பவத்தை பார்த்த பொது மக்கள் டிரைவரின் கவனக்குறைவால் தான் மாணவன் பலியானார் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அரசு பஸ்மோதி கல்லூரி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.