சென்னை, மார்ச் 14:  சினிமா நிறுவனம் நடத்தி நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொழில் நடத்தியவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜபெருமாள் (வயது 42). இவர் விருகம்பாக்கம் நடேசன் நகரில் கடந்த 3 மாதங்களாக கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சினிமா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அந்த சினிமா நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை எடுக்க இருப்பதாகவும் அதில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தி.நகர் துணை ஆணையர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை உதவிஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று மாலை அந்த சினிமா நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ராஜ பெருமாள், மற்றும் சென்னையை சேர்ந்த சுரேஷ் (வயது 34), பாலாஜி (வயது 24), ஆகிய 3 பேரை பிடித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அங்கு இருந்த சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.