சென்னை, மார்ச் 15:வரும் மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
திமுக தலைமையிலான இந்த கூட் டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றும் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்பட கூட்டணி கட்சித்தலைவர்கள் உடனிருந்தனர்.

திமுக போட்டியிடும் தொகுதிகள் வருமாறு:
1. தென்சென்னை
2. மத்திய சென்னை
3. வடசென்னை
4. ஸ்ரீ பெரும்பத்தூர்
5. காஞ்சிபுரம்
6. அரக்கோணம்
7. வேலூர்
8. திருவண்ணாமலை
9. சேலம்
10. கடலூர்
11. தர்மபுரி
12. திண்டுக்கல்
13. கள்ளக்குறிச்சி
14. மயிலாடுதுறை
15 .நீலகிரி
16. பொள்ளாச்சி
17. தென்காசி
18. தஞ்சாவூர்
19. தூத்துக்குடி
20. நெல்லை
காங்கிரஸ் தொகுதிகள்
1. திருவள்ளூர்
2. ஆரணி
3. திருச்சி
4. கரூர்
5. சிவகங்கை
6. கிருஷ்ணகிரி
7. விருதுநகர்
8. தேனி
9. கன்னியாகுமரி
10. புதுச்சேரி
மதிமுக
1. ஈரோடு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1. சிதம்பரம்
2. விழுப்புரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
1. மதுரை
2. கோவை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1. நாகை
2. திருப்பூர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
1.ராமநாதபுரம்
ஐஜேகே
1. பெரம்பலூர்
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி
1. நாமக்கல்
17-ந் தேதி வேட்பாளர் பட்டியல்
திமுக தனியாக தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்றும் 20 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும், 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேடபாளர் பட்டியலையும் திமுக அறிவிக்கும் என ஸ்டாலின் கூறினார்.
வேட்பாளர் பட்டியல் வருகிற 17-ந் தேதி அறிவிக்கப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
கூறினார்.