திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார்.
கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இதனை அறிவித்தார்.