சென்னை,ஏப்.7:

சாதாரண குடும்ப சூழலில் இருந்து வந்து சாதனையாளர்களாக பரிணமித்த 6 கிரிக்கெட் வீரர்கள் குறித்த கதை டிஸ்கவரி சேனலில் ஆல் அக்சஸ்: தி கான்டெண்டெர்ஸ் தொடர் ஆரம்பம்.

திறன்வாய்ந்தவர்களை உலகுக்கு அடையாளம் காட்டுவதில் முன்னணியில் இருப்பது டிஸ்கவரி
சேனல். இந்தப் பணியின் தொடர்ச்சியாக, டி20 தொடரில் கடுமையான முயற்சியிலால் இடம்பெற்ற 6 வீரர்களின் சாதனை பயணம் குறித்த நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனல் ஒளிப்பரப்பு செய்ய
உள்ளது.

ஆல் அக்சஸ் – தி கான்டெண்டெர்ஸ் என்ற பெயரிலான இந்தத் தொடரில் கிரிக்கெட் வீரர்கள் ஷாம் டூப் (மும்பை), கமலேஷ் நாகர்கோட்டி (ராஜஸ்தான் பார்மர், வேக பந்து வீச்சாளர்), இஷான் போரேல் (மேற்கு வங்காளத்தில் சண்டன் நகர்), ஹர்விக் தேசாய் (பாவ்நகர், குஜராத்) அன்மோல்ஃபீத் சிங் மற்றும் பிரப்சீமன் சிங் (பஞ்சாப், பாட்டியாலா) ஆகியோர் கடந்து வந்த கடுமையான பாதைகள் குறித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.