சென்னை, மார்ச் 17:
கீழ்ப்பாக்கம் மனநல காப்பக மருத்துவமனையில் சிகிசிசை பெற்றுவந்தவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
வேலூர் மாவட்டம் அரோக்கோணம் குருவராஜபேட்டை பகுதியை
சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவர் மீது திருத்தணி மகளிர் காவல் நிலைய வழக்கு உள்ளது.

அந்த வழக்கில் கைது செய்யப்படு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மனநல காப்பக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று பகல் அந்த மருத்துவமனையின் குளியலறை ஜன்னல் கம்பியில் போர்வையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் மனநல காப்பக மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.