சென்னை, மார்ச் 18:அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 இடங்களுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட் டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார்.

மக்களவை தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக, அதிமுக கூட் டணியில் இணைந்து போட்டியிடுகிறது. சென்னையில் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை வெளியிட்டனர்.

அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு வடசென்னை, விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணி யில் ஏற்கனவே அதிமுக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளன.
பிஜேபி, தமாகா, தேமுதிக ஆகியவை வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட வேண்டியிருந்தது.
இந்நிலையில், தேமுதிக தனக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி கள்ளக்குறிச்சி தொகுதியில் கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடு கிறார். இவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி யின் மகன் கவுதமசிகாமணியை எதிர்த்து களமிறங்குகிறார்.
வடசென்னையில் முன்னாள்
சட்ட மன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதியை எதிர்த்து போட்டியிடுகிறார்.
விருதுநகர் தொகுதியில் தேமுதிகவின் விசாரணை குழு உறுப்பினர் ஆர்.அழகர்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி தொகுதியில தேமுதிகவின் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் போட்டியி
டுகிறார்.