சி.எஸ்.கே. பயிற்சி ஆட்டத்தை காண குவிந்த ரசிகர்கள்

விளையாட்டு

சென்னை, மார்ச் 19:சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியின் பயிற்சி ஆட்டத்தைப் பார்க்க சுமார் 12,000 ரசிகர்கள் குவிந்தனர்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் போட்டியில், தோனி தலைமையிலான சி.எஸ்.கே. அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதவுள்ளது.

இதற்காக, சி.எஸ்.கே. அணி வீரர்கள், 2 குழுவாக பிரிக்கப்பட்டு சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நடந்த பயிற்சி ஆட்டத்தை காண ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. அதன்படி, சுமார் 12,000 ரசிகர்கள் சென்னை அணியின் பயிற்சிப் போட்டியை கண்டு ரசித்தனர்.