சென்னை, மார்ச் 19: மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மிகவும் அற்புதமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தனது கட்சி ஆதரவளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
அதிமுகவின் தேர்தல் அறிக்கை மிகவும் அற்புதமாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதாக அந்த தேர்தல் அறிக்கை உள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளேன். இதை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.