சென்னை, மார்ச் 19:
திமுகவின் தேர்தல் அறிக்கை உதவாக்கரை என்றும் தமிழகத்திற்கு உதவாத அரைவேக்காடுத்தனம் என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடுமையாக தாக்கி கூறியுள்ளார்.
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு அமைச்
சர் ஜெயக்குமார் தலைமை கழகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது. எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை அப்படிப்பட்டது அல்லது.

இந்த தேர்தல் அறிக்கை அரைவேக்காட்டு தனமானது, தமிழகத்திற்கு உதவாத உதவாக்கரை தேர்தல் அறிக்கை ஆகும்.
குறிப்பாக தமிழை ஆட்சி மொழி யாக்கும் விசயத்தில் இணை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

மத்திய அரசின் அலுவலகங்களில் தமிழ் இணை ஆட்சி மொழி என்றால் என்ன என்பதை அவர்கள் விளக்கவில்லை. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களது தேர்தல் அறிக்கை விளக்கமற்றதாக இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
அதிமுக தேர்தல் அறிக்கை ஒவ் வொன்றையும் தெளிவுபடுத்தி உள்ளது. வறுமைகோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்களின் அமோக வரவேற்பை பெறும்.

இரட்டை இலைக்கு வாக்களித் தால் மாதம் ரூ.1500 கிடைக்கும் என்ற அறிவிப்பே போதுமானதாகும் என்றார்.