பொள்ளாச்சியில் மாதர் சங்கம் சார்பில் முழு அடைப்புபோராட்டம்

தமிழ்நாடு

சென்னை, மார்ச் 19:
பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் இன்று பொள்ளாச்சி நகர் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கண்டித்துள்ள நிலையில் இன்று அனைவரும் ஒன்றிணைந்து பொள்ளாச்சி முழுவதும் வணிக நிறுவனங்களை அடைத்து விட்டு ஒருநாள் போராட்டம் நடத்தினர்.