சென்னை, மார்ச் 19: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் இளம் பெண் பலியானார். விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர்கள் ஜாபர் அலி (வயது 35)- பர்சானா (வயது 26) தம்பதியினர். இவர்களுக்கு 6 வயதில் தனிஷா என்ற மகள் உள்ளார். இவர்கள் மூவரும், பூந்தமல்லி நெடுஞ்சாலை வேம்புலி அம்மன் கோயில் அருகே பைக்கில் சென்றுக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசுப்பேருந்து மோதியதில் மூவரும் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.
தலையில் படுகாயமடைந்த பர்சானா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

படுகாயமடைந்த ஜாபர் மற்றும் தனிஷாவிற்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிந்து, விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து டிரைவர் திருவண்ணாமலையை சேர்ந்த காந்தி (வயது 37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.