கோவை, மார்ச் 19:கோவை அருகே நகைக்காக பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான மேரி ஏஞ்சலின். இவருக்கு அதே தெருவில் சொந்தமாக வீடு ஒன்று காலியாக உள்ளது. இந்நிலையில் மேரி ஏஞ்சலின் தங்கியுள்ள வீட்டிற்கு வந்த இருவர், வாடகைக்கு வீடு உள்ளதா என கேட்டு விசாரித்துள்ளனர்.

அவர்களை அழைத்து சென்று வீடு காண்பித்துள்ளார் மேரி ஏஞ்சலின், அப்போது, திடீரென மேரி ஏஞ்சலின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தாலி சங்கிலி உள்ளிட்ட 5 சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர்.