சென்னை, மார்ச் 19: திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரெயில்களில் இலவசமாக பயணம் செய்ய பாஸ்கள் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில் இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. மேலும் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் வருமாறு:-
தனியார் துறையில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் வேலை வாய்ப்பு சமூக ஊடகங்களை நெறிப்படுத்த புதிய சட்டம், காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலம்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ ரத்து,ஊரக வேலை வாய்ப்பு 150 நாளாக உயர்த்தப்படும்.

மத்திய, மாநில அரசு பணி காலியிடங்கள் நிரப்பப்படும், சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும், ஏழு பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும், கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்.ஆள்கடத்தல் தடுக்கப்படும். பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும், ஏழை நெசவாளர்களுக்கு இலவ மின்சாரம். கார்ப்பரேட் நிறுவனங்களில் 50 லட்சம் பேருக்கு வேலை, பாலியல் குற்றங்களை தடுக்க உரிய சட்டம், கொடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை.